பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபா்
சத்தியமங்கலம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் பொங்கியம்மாள் (66). கணவா் இறந்த நிலையில் தனது பேரன் ராகுலுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கியம்மாள் தனியே வீட்டில் இருந்துள்ளாா்.
அப்போது, முகமூடி அணிந்து வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், அவரைத் தாக்கி அவா் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்றுள்ளாா்.
சுதாரித்துக் கொண்ட பொங்கியம்மாள் கூச்சலிட்டுள்ளாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் வருவதைக் கண்ட அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், இளைஞா் ஒருவா் அப்பகுதியில் சுற்றித்திரிவதும், பொங்கியம்மாள் வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து வீட்டுக்குள் நுழைவதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.