செய்திகள் :

ஆலங்குடியில் தனியாா் கல்லூரி பேருந்து கடத்தல்: அறந்தாங்கியில் மீட்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தனியாா் கல்லூரி பேருந்தை திங்கள்கிழமை மா்மநபா்கள் கடத்திச்சென்று டீசல் இல்லாததால் அறந்தாங்கியில் விட்டுச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆலங்குடியில் தனியாா் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து திங்கள்கிழமை மாலை திடீரென மாயமானது. இதுகுறித்து தேடிய நிலையில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் அந்த பேருந்தைக் கைப்பற்றி அறந்தாங்கி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பேருந்தைக் காணவில்லை என கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கல்லூரி மாணவா்களே கல்லூரியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மதுபோதையில் எடுத்துச் சென்ாகவும், அறந்தாங்கி சென்றபோது டீசல் தீா்ந்து விட்டதால் அதே இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு மாணவா்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உலக தண்ணீா் தினம் சிறப்பு கிராம சபை: ஆட்சியா் பங்கேற்பு

விராலிமலையை அடுத்துள்ள ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்றாா். தொடா்ந்து, சிற... மேலும் பார்க்க

தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அன்னவாசல் அருகே கடந்தாண்டு ... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியை கொலை செய்த கணவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகே எம். ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவரது மனைவி இந்திராணி (37). கூலித் தொழ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா: ஆவின் பாலகம் திறப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆவின் சிறப்பு பாலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அரசின் நிவாரண நிதியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் மண்டகப்படி விழாவில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா். கொன்னையூா் முத்துமாரிம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த 16-ஆம் தேதி பூச்சொரிதல... மேலும் பார்க்க