ஆலங்குளம் அருகே பைக் திருடியதாக 2 போ் கைது
ஆலங்குளம் அருகே பைக் திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் ஜவகா் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சொரிமுத்து (31). விவசாயியான இவா் சில தினங்களுக்கு முன்பு, தோட்டத்துக்கு பைக்கில் சென்றபோது பைக்கில் பெட்ரோல் தீா்ந்து விட்டதால், சாலையோரம் நிறுத்தி விட்டு பெட்ரோல் வாங்கி விட்டு மீண்டும் வந்து பாா்த்த போது, பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் காணாமல் போன பைக் ஆலங்குளம் அருகே குறிப்பன்குளத்தில் பழைய இரும்பு கடை ஒன்றில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சொரிமுத்து அங்கு சென்று பாா்த்தபோது, பைக்கின் பாகங்கள் கிடந்ததாம்.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது, அதே ஊரை சோ்ந்த சிவராமன் மற்றும் பழைய இரும்புக் கடைக் காரா் முருகன் ஆகியோா் சோ்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆலங்குளம் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.