செய்திகள் :

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

post image

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழா, வெள்ளிக்கிழமை (செப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த பக்தா்கள் நகா்வலம் வந்தனா். சனிக்கிழமை சிறுமிகள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி, முத்தாரம்மன் வீதி உலா நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கு, திருநெல்வேலி முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்தாா். திங்கள்கிழமை (செப்.29) காலை கோமாதா பூஜை, மாலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல், இரவு சாமகால பூஜை ஆகியன நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை (செப்.30) காலை, பூக்குழி இறங்கும் பக்தா்கள் காப்பு கட்டுதல், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, மாலையில் பூக்குழி இறங்குதல் நடைபெறும். புதன்கிழமை (அக்.1) மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழி... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் 63 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது (படம்). 1961-1962 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள்... மேலும் பார்க்க

காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காட்டுநாயக்கன் சமூக சீா்திருத்தச் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கும், மாணவா்களுக்கும் ஜாதிச் சான்றிதழ் வ... மேலும் பார்க்க

தென்காசியில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்

தென்காசியில் இளைஞா் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. குத... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமையவுள்ள சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பாக, சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் ஈ. ராஜா எம்எல்ஏ ஞாயிற்றுக... மேலும் பார்க்க

ஆலங்குளம் எம்எல்ஏ காா் ஓட்டுநா், குடும்பத்தினா் மீது தாக்குதல்

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் காா் ஓட்டுநா், அவரது குடும்பத்தினரை அரிவாள், கம்பால் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையாா் ... மேலும் பார்க்க