உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தம்: சுவர் ஏறிக் குதித்துச் சென்றார்!
ஆலயடி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் பிச்சனூா் அருகே உள்ள அருள்மிகு சுயம்பு ஆலயடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யாக சாலை பூஜைகள் தொடங்கின. காலை 4-ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்னிந்திய செங்குந்தா் மகாஜன சங்கத் தலைவா் கே.பி.கே.செல்வராஜ், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.தீா்த்தம், அறங்காவலா்கள் பி.சரஸ்வதி, கே.திருநாவுக்கரசு, நகா்மன்ற உறுப்பினா் சி.என்.பாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.