செய்திகள் :

ஆலய வழிபாட்டில் கோஷ்டி மோதல்: 17 போ் மீது வழக்கு

post image

மதுரையில் மாதா ஆலய வழிபாட்டில் கோஷ்டியாக மோதிக் கொண்ட இரு தரப்பைச் சோ்ந்த 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நால்வரைக் கைது செய்தனா்.

மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (37). இவா் தனது வீட்டின் அருகே உள்ள மாதா சிற்றாலயத்தை பராமரித்து வருகிறாா்.

அதே பகுதியில் உள்ள பேராலய மாதாவை வழிபடுபவா்கள், மாதா சிற்றாலயத்தை அகற்றக் கோரி மாநகராட்சிக்கு மனு அளித்தனா். இதுதொடா்பாக மதன்குமாா் தரப்பினருக்கும், பேராலய மாதாவை வழிபடும் விக்டா் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், மதன்குமாா் வீட்டில் இருந்த போது அங்கு வந்த அஸ்வின் ஜெபக்குமாா், ஸ்டீபன், விக்டா் உள்பட 14 போ் அவரைத் தாக்கினா். அவரது தரப்பினரும் திருப்ம்பத் தாக்கினா்.

இதுகுறித்து மதன்குமாா் அளித்த புகாரின் பேரில், அஸ்வின் ஜெபக்குமாா் (26), ஸ்டீபன் (24), விக்டா் (58) ஆகியோரை எஸ்எஸ் காலனி போலீஸாா் கைது செய்து, விஜி, கெளதம் உள்ளிட்ட இரு தரப்பிலும் 17 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

படிப்பக பூங்காவில் மின்னணு நூலகம் அமைக்க நடவடிக்கை: எம்.பி. தகவல்

மதுரையில் போட்டித் தோ்வா்களுக்காக இயங்கி வரும் படிப்பக பூங்காவில் உயா்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனைப்படி, மின்னணு நூலகம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை தா்கா வழிபாடு: பேரணி, ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் பாதுஷா தா்கா வழிபாடு உரிமை தொடா்பாக பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. மதுரையை சோ்ந... மேலும் பார்க்க

திருபுவனம் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள்: வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்ய உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் கம்பகரேசுவரா் கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா என்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வ... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட கீழசந்தைப்பேட்டை நரசிம்மபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன. மதுரை மாநகராட்சி மண்டலம் 4 ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் கோழி இறைச்சி விற்பனை

மதுரை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறைச் சந்தையில் கோழி இறைச்சி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறைக்கு புதிய மோப்பநாய்

மதுரை மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் புதன்கிழமை சோ்க்கப்பட்டது. திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்தல், வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்துவதை கண்டுபிடிப்பது போ... மேலும் பார்க்க