உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
ஆளுநா் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு
மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாகவும் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன், உச்சநீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தது.
இந்நிலையில், ஆளுநா் ஆா்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும், தமிழ்நாட்டுக்கு100 நாள் வேலைத்திட்டத்துக்காக வழங்க வேண்டிய ரூ. 3,796 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், தமிழ்நாட்டுக்கான பள்ளிக் கல்வி நிதி ரூ. 2,152 கோடியை வழங்கவும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்தவும் வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் ஏப். 25-இல் சென்னையில் சாஸ்திரி பவன் முன் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.