செய்திகள் :

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! 6வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6 வது நாளாக இன்றும் (டிச.28) தொடர்கிறது.

கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் 3 வயது பெண் குழந்தையான சேத்துனா, கடந்த டிச.23 அன்று 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 120 வது அடியில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க கடந்த திங்கள் கிழமை முதல் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு ஒரு மிகப்பெரிய குழித்தோண்டப்பட்டு அதனுள் பாதுகாப்பு உறைகள் இறக்கும் பணி இன்று (டிச.28) காலையுடன் நிறைவடைந்து, அந்த குழந்தைக்கு நேராக சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், தற்போது தோண்டப்பட்ட அந்த குழியின் வழியாக மின்விசிறிகளும், ஆகிஸ்ஜன் டேங்கும், விளக்குகளும் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால், மீட்புப் பணி மிகவும் தாமதாமாகவும் அலட்சியப்போக்குடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, அந்த குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க அளித்த பேட்டியில் திங்கள் கிழமை விழுந்த குழந்தை இத்தனை நாள்களாக உணவுத் தண்ணீர் எதுவுமின்றி அந்த ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் படையினர் தொடர்ந்து திட்டங்களை மாற்றிக்கொண்டே இருப்பதினால் குழந்தையை வெளியே கொண்டுவருவது தாமதமாவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க: 2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?

மேலும், அந்த குழிக்குள் ஏதேனும் அதிகாரிகளின் குழந்தைகள் சிக்கியிருந்தால் இவ்வளவு தாமதமாக செயல்படுவார்களா ? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அந்த குழந்தையின் உறவினர்கள் மீட்புப் பணி குறித்து எந்த கேள்விக்கேட்டாலும், மாவட்ட ஆட்சியர் அதற்கு பதில் சொல்வார் என்று மீட்புப் படை அதிகாரிகள் கூறுவதாகவும் தற்போது வரையில் மாவட்ட ஆட்சியர் அங்கு வந்து எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், அந்த குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வருவோம் என மீட்புப் படை அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.

முன்னதாக, கடந்த செவ்வய்கிழமை (டிச.24) முதல் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையின் உடலில் எந்தவொரு அசையும் இல்லை என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மீண்டும் நடை திறப்பு

பத்தனம்திட்டா:சபரிமலை ஐயப்பன் கோயில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக திங்கள்கிழமை (டிச.30) மீண்டும் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந... மேலும் பார்க்க

குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது : அமைச்சர் அன்பில் மகேஸ்

மதுரை: குழந்தைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த ... மேலும் பார்க்க

65 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டவரை மீட்ட காசிமேடு மீனவா்கள்!

சென்னை: 65 நாட்களாக உணவின்றி கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டை சோ்ந்த மீனவரை காசிமேடு மீனவா்கள் மீட்டனா்.சென்னை, காசிமேட்டை சோ்ந்த வினோத் என்பவரின் படகில் மீனவா் லோகு உள்பட 8 போ் ஆழ்கடலுக்கு மீன் ப... மேலும் பார்க்க

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்

சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான மலை சோளிங்கர். இந்த மலையின்... மேலும் பார்க்க

பிரபல மலையாள சின்னத்திரை நடிகர் ஓட்டல் அறையில் சடலமாக மீட்பு!

பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் தனது ஓட்டல் அறையிலிருந்து இன்று (டிச.29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மலையாள சின்னத்திரையின் முன்னனி நடிகர் திலீப் சங்கர் இவர் பல்வேறு பிரபலமான சின்னத்திரை தொடர்களில் நட... மேலும் பார்க்க

எங்களுக்கு ஐயா ஐயாதான்: அன்புமணி விளக்கம்

விழுப்புரம்: பாமகவின் 2025- ஆம் புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுக் கூட்ட மேடையில் அன்புமணி - ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற சமரச போச்சுவார... மேலும் பார்க்க