மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
ஆஸி. ஓபன்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா!
ஆஸ்திரேலிய ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார்.
நடப்பு சாம்பியனான சபலென்கா போட்டித் தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருக்கும் பாலா படோசாவுடன் மோதினார். இதில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சபலென்கா வெற்றி பெற்றார்.
2023, 2024இல் சபலென்கா கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 20 ஆஸி. ஓபன் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத வீராங்கனையாக அசத்தி வருகிறார்.
சபலென்கா 12 கேம்களில் வென்ற 68 புள்ளிகள் பெற்றார். முதல் செர்வில் 77 சதவிகிதமும் இரண்டாம் செர்வில் 65 சதவிகிதமும் வெற்றி பெற்றார்.
9இல் 4 பிரேக் பாயிண்டுகளை வென்ற சபலென்கா 10இல் 8 நெட் பாயிண்டுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சபலென்காவை (21) விட படோசா (15) குறைவான தவறுகளே செய்தார்.
சபலென்கா தொடர்ச்சியாக 20 ஆஸி. ஓபன் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளார். 2024இல் ஒரு செட் கூட இழக்காமல் வென்று அசத்திய சபலென்கா இறுதிப் போட்டியில் ஜென்ங் கின்வெனை வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
2013க்குப் (விக்டோரியா அஜரென்கா) பிறகு சபலென்கா மட்டுமே ஆஸி. ஓபன் பட்டத்தை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 28-5 வெற்றி - தோல்வி என்ற அளவில் சிறப்பாக விளையாடிவருகிறார்.