செய்திகள் :

ஆஸி.யின் போராட்டத்துக்கு சிட்னியில் பலன் கிடைக்கும்..! அலெக்ஸ் கேரி நம்பிக்கை!

post image

2025ஆம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தேர்வாகியுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது பார்டர் கவாஸ்கர் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மீதமுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டிகளில் ஆஸி. வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். மாறாக இந்தியா அணிக்கான வாய்ப்புகள் மங்கிவிட்டன.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியின் ஜன.3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இது குறித்து ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கூறியதாவது:

24 மாதங்களின் ஒழுக்கத்துக்கு பலன்

கடந்த 24 மாதங்களாக ஆஸ்திரேலியாவின் திடமான கிரிக்கெட்டுக்கு பலனாக சிட்னியில் வெற்றிபெறும். அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்கள், திறமையான லெஜெண்ட்டுகள் அடங்கியிருக்கும் ஆஸி. அணி தொடர்ச்சியாக ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். ஆனால், ஓரளவுக்குமேல் அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது.

இந்திய அணி கம்பேக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தது. அதனால் நாங்கள் தலையை குணிந்து அடுத்த போட்டியில் வெற்றி பெருவதற்கான வாய்ப்பை நோக்கியுள்ளோம். பிஜிடி கோப்பையை வெலன்றால் நன்றாக இருக்கும்.

ஸ்டார்க் விளையாடுவாரா?

ஸ்டார்க் நன்றாக இருக்கிறார். நிறைய ஆண்டுகள் நான் ஸ்டார்க் உடன் விளையாடி இருக்கிறேன். அவரைப் போல வலுவான கிரிக்கெட்டரை நான் பார்த்ததில்லை. அவருக்கு வலியினால் முகம் சுழிக்குமாறு இருந்தாலும் அவரால் விளையாட முடியும்.

மிட்செல் மார்ஷ் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சுமாரன செயல்பாடுகளையே அளித்து வருகிறார். ஆல்-ரவுண்டராக அவர் ஃபீல்டிங்கில் மட்டுமே இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

5ஆவது போட்டியில் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அலெக்ஸ் கேரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மிட்செல் மார்ஷ் கம்பேக் தருவாரா?

எப்போதாவது ஒருவர் மீது குறைகூற முற்பட்டால் ஆஸி. வீரர்களாகிய நாங்கள் எவ்வளவு நன்றாக விளையாடுவோம் என்று உலகத்திற்கு காட்டுவோம். அதனால், இது மிட்செல் மார்ஷுக்கான நேரம் என்றார்.

பிஜிடி கோப்பையை வழங்க கவாஸ்கர் அழைக்கப்படாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்!

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வழங்க அழைக்கப்படாதது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ப... மேலும் பார்க்க

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் பும்ரா?

இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவ... மேலும் பார்க்க

காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்

எந்த ஒரு காரணமுல் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சி... மேலும் பார்க்க

“சூப்பர் ஸ்டார் கலாசாரம்...” விராட் கோலியை சரமாரியாக விளாசும் முன்னாள் இந்திய வீரர்!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைப... மேலும் பார்க்க