செய்திகள் :

ஆஸி. வெளியிட்ட இந்த ஆண்டின் டெஸ்ட் அணி; ஜஸ்பிரித் பும்ரா கேப்டன்!

post image

இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா மட்டுமின்றி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம் பெற்றுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, மிகவும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பும்ரா 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிக்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறதா?

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால், 1478 ரன்கள் குவித்துள்ளார். அதில் 9 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 161 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்த ஆண்டில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 36 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்தார்.

இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எடுத்துள்ள போதிலும், அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க: சிட்னி டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா? பாட் கம்மின்ஸ் பதில்!

ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியிலிருந்து பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியிலிருந்து ரச்சின் ரவீந்திரா மற்றும் மாட் ஹென்றியும், இலங்கை அணியிலிருந்து கமிந்து மெண்டிஸும், தென்னாப்பிரிக்க அணியிலிருந்து கேசவ் மகாராஜும் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவ... மேலும் பார்க்க

காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்

எந்த ஒரு காரணமுல் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சி... மேலும் பார்க்க

“சூப்பர் ஸ்டார் கலாசாரம்...” விராட் கோலியை சரமாரியாக விளாசும் முன்னாள் இந்திய வீரர்!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைப... மேலும் பார்க்க

கோப்பையை வழங்க அழைக்கவில்லை; சுனில் கவாஸ்கர் அதிருப்தி!

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்க தன்னை அழைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சி... மேலும் பார்க்க