ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் அஸ்வின்!
ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார்.
சமீபத்தில் ஆர். அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் (39 வயது) 220 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 2011-இல் டெஸ்ட்டில் அறிமுகமான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து டிச.18, 2024-இல் ஓய்வு பெற்றார்.
பிஜிடி தொடர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், ஆஸி.யின் பிரபலமான டி20 லீக்கான பிபிஎல் (பிக் பாஷ் லீக்கில்) சிட்னி தண்டர் அணிக்காக விளையாடுகிறார்.