சர்வ வஸ்ய ஹோமம்: `பாபாவின் அற்புதம் காண வாருங்கள்' - சங்கல்பம் செய்துகொள்ள சகலமு...
ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.
வட இந்தியாவில் பெரியளவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி கொண்டாடத்தில் ஈடுபடுவர். வட இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும், ஏன் உலங்கெங்கிலும் உள்ள இந்தியர்கள் இந்தப் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: புலிகளின் புலி: தில்லி கேப்டனாக அக்ஷர் படேல்!
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மெல்பர்னில் வாழும் இந்தியர்களுக்காக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா வென்ற உலகக் கோப்பையுடன் சுய புகைப்படம் எடுத்துக்கொள்ள அனைவருக்கும் வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, பிக் பாஷ் லீக் மற்றும் மகளிர் பிக் பாஷ் போட்டிகளுக்கான பொருள்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொப்பிகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்களையும் வழங்கி ஹோலி கொண்டாட்டங்களை மேலும் வண்ணமயமாக்கியிருக்கிறது ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!
Cricket Australia extended warm wishes to everyone celebrating the vibrant festival of #Holi.
— ANI (@ANI) March 14, 2025
To join in the festivities, Cricket Australia took the ICC Cricket World Cup 2023 Trophy to Holi events in Melbourne, giving cricket fans and the community a unique opportunity to take… pic.twitter.com/UDMLWF9Xkq