செய்திகள் :

இங்கிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகலா?

post image

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையையும் பறிகொடுத்தது. இதனால், இந்திய வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். அதுமட்டுமின்றி, இந்திய வீரர்கள் உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாட அறிவுறுத்தப்பட்டனர்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 3 போட்டிகளில் விளையாடி வெறும் 31 ரன்கள் மட்டுமே குவித்தார். சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியிலும் விலகினார்.

முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற தவறிய நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், விராட் கோலி தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதாகவும் பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒருவேளை ரோஹித் சர்மா விலகினால் புதிய கேப்டன் யார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. துணை கேப்டன் பும்ரா இன்னும் காயத்தில் இருந்து மீளாத நிலையில் புதிய கேப்டன் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியாவின் ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 4 நாள்கள் கொண்ட 2 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர்கள் சிலரும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி ஹெட்டிங்லேயில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

அதற்கு முன்னதாக, மே 30 ஆம் தேதி காண்டர்பெர்ரியில் முதல் பயிற்சி ஆட்டமும், ஜூன் 6 ஆம் தேதி நார்த்தாம்டன்னில் இரண்டாவது பயிற்சி ஆட்டமும் நடைபெறவுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயருக்கு இந்தியா ஏ அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024-2025 இடைப்பட்ட காலங்களில் கருண் நாயர் சையத் முஷ்டாக் அலி, ரஞ்சி தொடர்களில் முன்னணி ரன் குவிப்பாளராக இருந்தார். ரஞ்சி கோப்பையில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உள்பட 863 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!

சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடும் விராட்கோலி! ஸ்மித்துடன் ஒரே களத்தில்..!

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற லீக் தொடரான பிக்-பாஸ் லீக்கின் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடுவது குறித்த தகவல்களை அந்த அணி உறுதிபடுத்தியிருக்கிறது.இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐபிஎல்... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+, ஷ்ரேயாஸ் உள்ளே, இஷான் வெளியே?

டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-25ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தினை சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மேன், பியூ வெப்ஸ்டராகிய 3 இளம் வீரர்கள் ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் தனது தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், டி20 அண... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேசம் ஒருநாள் தொடர்; காரணம் என்ன?

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ... மேலும் பார்க்க