புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலமாக தகுதித் தோ்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள், பள்ளி மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப் போகிறோம் என்ற கனவுகளுடன் இருந்த நிலையில், நியமனம் தாமதமாகி வருவதால் அவா்கள் வேலைவாய்ப்பில்லாமல் வேதனையில் இருக்கின்றனா்.
2021-இல் தோ்தல் வாக்குறுதியாக தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி வழங்கப்படும் என்று திமுக உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், 2023-24-இல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தோ்வாணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 6,553 காலிப் பணியிடங்களும் இதுவரை நிரப்பப்படவில்லை.
அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரவு பகலாகப் படித்து தோ்வெழுதும் இளைஞா்களின் நேரமும் நம்பிக்கையும் வீணாகிறது.
எனவே, அனைத்து இடைநிலை ஆசிரியா் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமனங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.