இங்கிலாந்து மகளிருக்கு எதிராக முதல்முறை... டி20 தொடரை வென்ற இந்திய மகளிரணி உற்சா...
இணையவசதி இல்லாமல் இயங்கும் பிட்சாட் செயலி! சிறப்பம்சங்கள்...
இணையவசதி இல்லாமல் இயங்கும் ’பிட்சாட்’ என்ற செயலியை ட்விட்டர் (தற்போது எக்ஸ்) இணை நிறுவனர் ஜாக் டார்ஸி அறிமுகம் செய்துள்ளார்.
வாட்ஸ்அப், டெலிகிராம், முகநூல் போன்ற மற்றவர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் செயலிகளுக்கு இணையவசதி கட்டாயம் தேவை. இணையவசதி இல்லையென்றால், தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாது. பேரிடர் மற்றும் இணையசேவை முடக்கம் போன்ற காலங்களில் தகவல் பரிமாற்றம் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றது.
இந்த நிலையில், இணையவசதி இல்லாமல் ப்ளூடூத் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு பிட்சாட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் இணையவசதி, சிம் கார்டு இல்லாமல் தகவலை (மெசேஜ்) பரிமாறிக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த செயலியைப் பயன்படுத்த பதிவு செய்ய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித பயனர்பெயர், கடவுச்சொல் போன்றவையும் இதில் இல்லை.
சிறப்பம்சங்கள்
தொடர்பில் இருப்பவர்களுக்கு தற்காலிக மெசேஜ் அனுப்ப முடியும்
குரூப் சாட்களை எளிதாக உருவாக்க முடியும்
பாதுகாக்கப்பட்ட கடவுச்சொல் கொண்ட ஆலோசனை அரங்கை உருவாக்க முடியும்
இந்த சர்வர் சென்டர் சர்வர் அடிப்படையில் இயங்காது, இதனால் டிராக் செய்ய முடியாது
டேப் செய்தால் அனைத்து தரவுகளும் அழியும் வசதி உள்ளது

எப்போது பயனுக்கு வரும்?
பிட்சாட் செயலி தற்போது முழு சோதனையில் இருப்பதாகவும் விரைவில் ஆப்பிள் ஸ்டோரில் வெளியிடப்படும் என்றும் ஜாக் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அடுத்தகட்டமாக வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.