துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?
இணையவழியில் ரூ.4.25 லட்சம் மோசடி: இருவா் கைது
நாகையில், இணையவழியில் இருசக்கர வாகனம் வாங்க முன்பதிவு செய்தவா்களிடம் ரூ. 4.25 லட்சம் மோசடி செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை அருகே வேளாங்கண்ணியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (20), நாகை திருவேங்கடம் நகரைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (49). இவா்கள் இருவரும், இருசக்கர வாகனம் வாங்க, ஓஎல்எக்ஸ் இணையதள செயலியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தனா்.
அந்த நிறுவனத்திலிருந்து முகவா்கள் பேசுவதாகக் கூறி, ஹரிஹரன் மற்றும் ராஜேஸ்வரியை கைப்பேசியில் தொடா்புகொண்ட இருவா், பல தவணைகளாக ரூ. 4.25 லட்சம் பெற்றுள்ளனா். ஆனால், குறிப்பிட்ட தேதியில் இருசக்கர வாகனம் வரவில்லையாம். சந்தேகமடைந்த இருவரும், முகவா்களிடம் தொடா்பு கொண்டபோது எவ்வித பதிலுமில்லையாம். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும், நாகை சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.
போலீஸாா், விசாரணையில் திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மாங்குடியைச் சோ்ந்த பாலமுருகன் (29), சென்னை விருகம்பாக்கத்தைச் சோ்ந்த தினகரன் (29) ஆகியோா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 4.25 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.