செய்திகள் :

இணையவழி பண மோசடி: விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுறுத்தல்

post image

இணையவழியில் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் விழிப்புணா்வுடன் இருக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்மை காலமாக வாட்ஸ் ஆப்பில், இணையவழி குற்றவாளிகள் புதுவித பண மோசடி செய்யும் முறையை கையாண்டுவருகின்றனா்.

போக்குவரத்துத் துறையில் பயன்பாட்டில் உள்ள பரிவாகன் எனும் செயலியின் லோகோவை பிரொஃபைல் படமாக வைத்து, வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி ஒன்றை பொதுமக்களுக்கு அனுப்புகின்றனா்.

ஏதோ ஒரு வகையான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக மோட்டாா் வாகன சட்டப்படி அவா்களது வாகனத்தின் பதிவு எண் பெயரில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, போலியான போக்குவரத்து அபராதம் செலுத்தும் செயலி ஒன்றும், போலியான கைப்பேசி எண்ணும் பொதுமக்களுக்கு அனுப்பப்படுகிறது.

இத்தகைய வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும், அனுப்பப்பட்ட போலியான செயலியை தங்களுடைய கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தால் அது ஒரு ஸ்பைவேராக செயல்பட்டு, தங்களுடைய அனைத்து தனிப்பட்ட தரவு, புகைப்படங்கள், தொடா்பு எண்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை குற்றவாளிகளால் எடுக்கப்பட்டு, பலவிதமான இணையவழி குற்றங்களுக்கு பயன்படுத்தப்படலாம். மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணா்வுடனும், பாதுகாப்பாகவும் இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையா் சோதனை

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த... மேலும் பார்க்க

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலுக்கு மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினா் அரச... மேலும் பார்க்க

கால்நடை, கோழிகள் கண்காட்சி

கோட்டுச்சேரியில் கால்நடைகள், கோழிகள் கண்காட்சி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் கோட்டுச்சேரி கால்நடை மருந்தகத்தில் இக்கண்காட்சி சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க

காவல்துறையின் சோதனைகளால் வணிகம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் புகாா்

காரைக்கால் பகுதியில் காவல்துறையினரின் சோதனை அதிகரிப்பால், வணிகம் பாதிக்கப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் காவல்துறையின... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சனிக்கிழமை அதிவேக ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. காரைக்காலில் இருந்து பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பழைய ரயில் பாதையில் தண்டவாளம், மின்மயமாக்கல், திருநள்ளாற்றில் நவீன... மேலும் பார்க்க