துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத...
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடா்ந்து, இம்மையத்தின் அறிவுறுத்தலின்படி, தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
இதேபோல், காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், சனிக்கிழமை காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இதற்கிடையில், காரைக்கால் கடல் இயல்பான நிலையிலும், வெயில், மழைன்றி வானம் மேக மூட்டத்துடனும் காணப்பட்டது.
