செய்திகள் :

இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!

post image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3வது நாளாகத் தொடர்ந்து சரிந்து, கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு மூன்றாவது நாளாக 12 காசுகள் சரிந்து ரூ. 85.27 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் ரூ. 85.23 காசுகளாக வணிகமானது.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ரூபாய் மதிப்பு தொடந்து எதிர்மறையாகவே இருந்தது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு கடுமையாகச் சரிந்து ரூ. 85.28 காசுகளாக இருந்தது.

வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு ரூ. 85.27 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 காசுகள் சரிந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 4 காசுகள் குறைந்து ரூ. 85.15 ஆக இருந்தது. திங்கள் கிழமை 9 காசுகள் சரிந்தது.

இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து, ரூ. 85.81 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று 85.27 காசுகளாக இருந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது.இந... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆட்டோ, பார்மா துறை பங்குகள் ஏற்றம்!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 27) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தது. நிஃப்டி நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று ஏற்றம் கண்டு 23,800 புள்ளிகளுக்கு மேல் ... மேலும் பார்க்க

உச்சம் தொட்ட ஸ்மாா்ட்போன் ஏற்றுமதி

கடந்த நவம்பரில் இந்திய அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) ஏற்றுமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது குறித்து துறை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் அறிதிறன் பேசி ஏற்றுமதி கடந்த ந... மேலும் பார்க்க

மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!

முதலீட்டாளர்களிடையே நிலவிய நிலையற்ற தன்மையால் பங்குச் சந்தை பெரிய மாற்றங்களின்றி நிறைவு பெற்றது. சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து 78,472 புள்ளிகளுடனும் நிப்ஃடி 22 புள்ளிகள் உயர்ந்து 23,750 புள்ளிகளுட... மேலும் பார்க்க

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்: இன்று எவ்வளவு உயர்ந்தது?

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு வியாழக்கிழமை (டிச. 26) பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000-க்கு விற்பனையாகிறது. டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலை... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 புதன்கிழமை அதிகரித்துள்ளது.கடந்த வார நாள்களில் ரூ. 57,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, வார முடிவில் ரூ. 56,800-க்கு விற்பனை செய்யப்... மேலும் பார்க்க