மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்
இந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல யூடியூபர்!
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் - அமெரி, மலையாள நடிகர் அர்ஜூன் அசோகனின் புதிய திரைப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகில் அறிமுகமாகின்றார்.
துபையைச் சேர்ந்தவர் யூடியூபர் காலித் அல் - அமெரி. இவர், நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட மலையாள திரையுலகின் பிரபலங்களுடன் இணைந்து வெளியிட்ட யூடியூப் விடியோக்கள் மூலம் இந்தியாவிலும் பிரபலமாக அறியப்படுகிறார்.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில், நடிகர்கள் அர்ஜூன் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர், இஷான் சௌகத் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாத்தா பச்சா’ எனும் புதிய படத்தின் மூலம் காலித் அல் - அமெரி மலையாள திரையுலகில் அறிமுகமாகின்றார்.
டபிள்யூ.டபிள்யூ.இ. (WWE) சண்டைப் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் புதிய படத்தில் காலித் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, மலையாள மொழி மற்றும் திரைப்படங்கள் மீதான தனது ஆர்வத்தை யூடியூப் விடியோக்களில் தெரிவித்திருந்த அவர், அமீரகம் மற்றும் கேரளாவில் வசிக்கும் மலையாளிகளின் விருப்பமான யூடியூபராக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜீவா - 46 படப்பிடிப்பு ஆரம்பம்!