செய்திகள் :

இந்தியாவின் பலவீனமான பிரதமர் : எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து ராகுல் பதிவு

post image

புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்கா, எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இதனை மேற்கோள்காட்டியே, ராகுல் காந்தி இந்த பதிவை இட்டுள்ளார்.

எச்-1பி விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் உயர்த்தி இன்று அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்காவின் எச்-1பி விசா பெற ரூ.90 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா வழங்கிய எச்-1பி விசாவில் 71 சதவிகிதத்தை இந்தியர்கள் பெற்றிருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு, இந்திய தகவல்தொழில்நுட்ப ஊழியர்களைக் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு குறித்த செய்திய தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் ராகுல் காந்தி, நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள்: ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும்! - ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் வாக்குத் திருட்டை நிரூபிக்க ஹைட்ரஜன் அணுகுண்டு விரைவில் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் சடலமாக மீட்பு

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருமலா வார்டு கவுன்சிலரும் பாஜக தலைவருமான கே. அனில் குமார் திருமலையில் உள்ள ஷாப்பிங் வளாகத்திற்குள... மேலும் பார்க்க

வானில் பிரகாசமாக எழுந்த பிழம்பு! தில்லி-என்சிஆர் பகுதி மக்கள் ஆச்சரியம்!

தலைநகர் புது தில்லியின் பெரும்பாலான பகுதி மக்கள், சனிக்கிழமை அதிகாலையில், வானில் பிரகாசமாக எழுந்த பிழம்புகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.இதனை விடியோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்... மேலும் பார்க்க

வெளிநாட்டுச் சார்புதான் நம்முடைய எதிரி: பிரதமர் மோடி

வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் எதிரி என்றும், தன்னம்பிக்கைதான் மருந்து என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வளர்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியாகினார்.உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்த்வார் வனப்பகுதியில் பயங்கரவாத... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன... மேலும் பார்க்க