செய்திகள் :

`இந்தியாவின் மீது 20 - 25 சதவிகித பரஸ்பர வரியா?' - ட்ரம்பின் பதில் என்ன?

post image

ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, 'ஒப்பந்தம் பேசலாம்' என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்தக் காலக்கெடுவைப் பயன்படுத்தி, சில நாடுகள் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் போட்டு, தங்களுடைய நாட்டிற்கான வரி விகிதத்தை குறைத்துள்ளது.

ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு வராத நாடுகளுக்கு ட்ரம்பே கடிதம் எழுதி வருகிறார்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா இப்போதுவரை அப்படி எந்த ஒப்பந்தமும் அமெரிக்கா உடன் போடவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை மட்டும் நடந்துவருகிறது.

இதை இந்திய அரசு தரப்பும் உறுதி செய்துள்ளது. ட்ரம்பும் பல முறை இந்தப் பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்துவிட்டார்.

ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி வர, இன்னும் ஒரு நாளே உள்ளது.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

இந்த நிலையில் ட்ரம்ப், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "இந்தியா நமக்கு நல்ல நண்பன். ஆனால், பிற நாடுகளை விட, இந்தியா நம் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது.

இப்போது 'நான்' பொறுப்பில் இருக்கிறேன். அதனால், அது இனி நடக்காது.

வர்த்தக ஒப்பந்தங்கள் நன்கு வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். பிற நாடுகளுக்கும் நன்கு வேலை செய்யலாம். முக்கியமாக, இது அமெரிக்காவிற்கு நன்கு வேலை செய்கிறது" என்று கூறியுள்ளார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்தியாவிற்கு எத்தனை சதவிகித வரி?

'இந்தியா மீது 20 - 25 சதவிகித வரி விதிக்கப்படுமா?' என்கிற கேள்விக்கு, 'அப்படி தான் நினைக்கிறேன்' என்று ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி முதன்முதலாக பரஸ்பர வரி அறிவிக்கப்பட்ட போது, இந்தியா மீது 26 சதவிகித வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காலையில் வாக்கிங் சந்திப்பு; மாலையில் ஸ்டாலின் வீட்டுக்கே சென்ற ஓ.பி.எஸ் - அடுத்தடுத்த பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் லேசான தலை சுற்றல் காரணமாக, அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று காலையில் வழக்கம்போல வாக்கிங் சென்றார்.ஸ்... மேலும் பார்க்க

`படுத்துட்டு போத்தினா என்ன? போத்திட்டு படுத்தா என்ன? எல்லாம் ஒன்னுதான்’ - அன்வர் ராஜா எக்ஸ்க்ளூஸிவ்

``நீண்ட நெடிய காலமாக அதிமுக-வில் பயணித்து வந்தீர்கள். இப்பொழுது திமுக-வில் இணைகிறீர்கள். எப்படி இருக்கு திமுக?”``இனிமேதான் பாக்கணும். என்னைய பொறுத்த வரையிலும் நல்லாத்தான் இருக்கு. முதலமைச்சர் தளபதி என... மேலும் பார்க்க

பாலத்தீனத்தை அங்கீகரிக்கவிருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் - மத்திய கிழக்கு வரலாற்றில் திருப்புமுனையா?

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலைகடந்த சில நாள்களில் பாலத்தீன தனி நாடுக்கு, ஐரோப்பாவின் முக்கிய அரசுகளான பிரான்ஸும், பிரிட்டனும் அங்கீகாரம் அளிக்கப்போவதாக அறிவி... மேலும் பார்க்க

"திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" - ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்

தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினைச் சந்தித்து இன்று (ஜூலை 31) நலம் விசாரித்திருக்கிறார்.ஸ்டாலினைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலத... மேலும் பார்க்க

OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்ன?

ஓபிஎஸ் தனது அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் கடிதம் எழுதியும் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை.இ... மேலும் பார்க்க

”பாஜகவுடன், திமுக சேர்ந்தால் பாஜக நல்ல கட்சி; அதிமுக சேர்ந்தால் தீண்டத்தகாத கட்சியா?” -கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் களத்திற்கு முதல் முதலாக வந்துள்ளது அ.தி.மு.கதான். மறைந்த முன்னா... மேலும் பார்க்க