செய்திகள் :

இந்தியாவில் மோட்டோ ஜி86 பவர் அறிமுகம்! சிறப்பம்சங்கள்...

post image

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.

முன்னதாக, மோட்டோ ஜி86, ஜி96 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இந்த நிலையில், அதிக பேட்டரி திறன் கொண்ட மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோரோலா, ஃபிளிப் கார்ட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள் என்ன?

  • இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் 6,720 எம்ஏஎச் பேட்டரி, 50 மெகாபிக்சல் சோனி லைட்டியா - 600 கேமரா ஆகியவை ஆகும்.

  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி நினைவகம் (1 டிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்)

  • 1.5 கே போல்ட் 4500 நிட்ஸ் அம்சம் கொண்ட 6.7 இன்ச் சூப்பர் எச்டி டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 15, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 ப்ராசஸர்

  • பின்புறக் கேமிரா - 50 மெகாபிக்சல் சோனி லைட்டியா + 8 மெகாபிக்சல், முன்புறக் கேமிரா - 32 மெகாபிக்சல்

  • நிறங்கள் : பான்டோன் கோல்டன் சைப்ரஸ், பான்டோன் காஸ்மிக் ஸ்கை, பான்டோன் ஸ்பெல்பவுண்ட்

  • ஓராண்டு வாரண்டி

  • விலை ரூ. 17,999 (ஃபிளிப் கார்ட் தளத்தில் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது)

moto g86 power smart phone specifications

இதையும் படிக்க : மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்தியாவின் சேவைகள் துறை, கடந்த ஜூலை மாதத்தில் முந்தைய 11 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்தில் நிறு... மேலும் பார்க்க

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி (இந்தியா) லிமிடெட்டின் ஒருங்கிணைந்த வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 29 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக்... மேலும் பார்க்க

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆா்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்தது. இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கட... மேலும் பார்க்க

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் அதிகரித்து ரூ.284 கோடியாக உள்ளதாக பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது. சமீபத்திய கட்டண அறிவிப்பு காரணமாக ... மேலும் பார்க்க