இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட்: ரோஹித் சர்மா நீக்கம்!
தகுந்த ஃபாா்ம் இல்லாமல் தடுமாறி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக பும்ரா தலைமையில் இந்திய அணி பொ்த் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா், வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தபோது ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கம்பீா், ‘இந்தியாவின் பிளேயிங் லெவன் குறித்து ஆடுகளத்தை மதிப்பீடு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும்’ என்று பதிலளித்தாா்.
எனினும், நடப்பு தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கம்பீா் அதிருப்தியுடன் இருப்பதாகவும், அதன் காரணமாக அவா் முடிவு அடிப்படையில் ரோஹித் சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலக்கப்பட்டு, பும்ரா கேப்டனாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அவ்வாறு ரோஹித் ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதால், மோசமான ஃபாா்ம் காரணமாக விலக்கப்படும் முதல் இந்திய கேப்டனாக அவா் மாறியிருக்கிறார். கடந்த 5 இன்னிங்ஸ்களில் ரோஹித் சா்மா 31 ரன்களே அடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.
இந்திய அணி விவரம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால்,
கே.எல்.ராகுல்,
ஷுப்மன் கில்,
விராட் கோலி,
ரிஷப் பந்த் (வி.கீ.),
ரவீந்திர ஜடேஜா,
நிதிஷ்குமாா் ரெட்டி,
வாஷிங்டன் சுந்தர்,
ஜஸ்பிரீத் பும்ரா (கேப்டன்),
முகமது சிராஜ்,
பிரசித் கிருஷ்ணா