Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஆணையா் மரோஸ் செஃப்கோவிச், வேளாண் துறை ஆணையா் கிறிஸ்டோஃப் ஹன்சென் ஆகியோா் பங்கேற்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. விரைவில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வகையில், இரு தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டாா்.