செய்திகள் :

``இந்தியா, சீனா, பிரேசில் புதினிடம் பேசுங்கள்; இல்லையென்றால்..'' - நேட்டோ எச்சரிக்கை

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 'வரி' அலை மீண்டும் சுழற்றி அடிக்கத் தொடங்கியுள்ளது.

அடுத்த 50 நாள்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்

மார்க் ரூட் சொல்வதென்ன?

இந்த நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், "சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் வரி குறித்து பார்க்க வேண்டும். இதனால், நீங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.

புதினுக்கு போன் செய்து அமைதி பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துங்கள். இல்லையென்றால், இந்த வரி பிரேசில், இந்தியா, சீனாவை கடுமையாகப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் லேட்டஸ்ட் அறிவிப்பு படி, ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100 சதவிகித வரி விதிக்கும்.

ட்ரம்ப் நட்பு ரீதியாக தான் இவ்வளவு நாள்களாக ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா உடன் காய் நகர்த்தி வந்தார். அதற்கு புதின் சரியாக ஒத்துழைக்காததால், வரி என்கிற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார்.

US Judges: 17 நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை.. பின்னணி என்ன?

அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம், சமீபத்தில், 17 நீதிபதிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது.யார் இந்த நீதிபதிகள்? இது குறித்து நீதிபதிகள் சங்கம், "எந்தவொரு காரணமும் இல்லாமல், கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளு... மேலும் பார்க்க

``பதிலடி கொடுக்காவிட்டால் காமராஜர் ஆன்மா மன்னிக்காது..'' - திருச்சி சிவா பேச்சு குறித்து ஜோதிமணி

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் எதிர்வினைகளை கிளப்பியிருக்கிருக்கிறது. இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி தனது சமுகவளைதள பக்கத்தில் தனது எதிர்ப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Doctor Vikatan:சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கிய உணவா... பொதுவாக ஜிம் செல்வோர், உடற்பயிற்சி செய்வோர்தான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதைப் பார்க்கிறோம். எல்லோரும் சாப்பிடலாமா, அதில் மாவுச்சத்தும் ச... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது? - ட்ரம்ப் அறிவிப்பு; வரி குறைக்கப்படுமா?

வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பரஸ்பர வரி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி வரை காலக்கெடு. இந்த நாள்களில் அமெரிக்கா ... மேலும் பார்க்க

Health: சோர்வே போ போ.. எனர்ஜியே வா வா..! டாக்டர் கைடன்ஸ்!

சோர்வு... இதை அசதி, அலுப்பு, களைப்பு, தளர்ச்சி என்றெல்லாம் சொல்வார்கள். பொதுவாகவே நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், இரவில் சோர்வு ஏற்படுவது இயல்பே. சில வேளைகளில், பல நாள்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்து,... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: ஒரு நாளைக்கு ஒரு நபர் எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். பச்சை முட்டை, வேகவைத்த முட்டை- இரண்டில் எது சிறந்தது, மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மையா? முட்டை அதிகம் எடுப்பதா... மேலும் பார்க்க