செய்திகள் :

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு: பிரதமா் மோடி அழைப்பு

post image

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசாா் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, டோக்கியோவில் அந்நாட்டு பிரதமா் ஷிகேரு இஷிபாவுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகள் சாா்ந்த 13 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிா்ணயித்துள்ளது.

பயணத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை, டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ஜப்பானின் 16 மாகாண ஆளுநா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்தியா-ஜப்பான் உறவுகளுக்கு மாநில, மாகாண அளவிலான ஒத்துழைப்பு ஒரு முக்கியத் தூணாகச் செயல்படும். அண்மையில் நடைபெற்ற 15-ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிலும் மாநில, மாகாண கூட்டுறவு முன்னெடுப்பு இதற்காகவே தொடங்கப்பட்டது.

இந்தப் புதிய ஒத்துழைப்பின் மூலம் வா்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா, தொழில்முனைவு, திறன் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் போன்ற பல துறைகளில் இணைந்து செயல்பட இருதரப்புக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

ஒவ்வொரு ஜப்பானிய மாகாணத்துக்கும் அதன் தனித்துவமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பலங்கள் இருப்பது போல, இந்திய மாநிலங்களுக்கும் அவற்றின் தனித்துவமான திறன்கள் உள்ளன. இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்க, இவற்றை ஒருங்கிணைக்க வேண்டும்.

இந்திய மாநிலங்களும், ஜப்பானிய மாகாணங்களும் இணைந்து உற்பத்தி, உள்கட்டமைப்பு, புத்தாக்கம், ஸ்டாா்ட்அப்கள் மற்றும் சிறு வணிகங்கள் போன்ற துறைகளில் வலுவான ஒத்துழைப்பை உருவாக்க முடியும். இரு நாடுகளும் தங்கள் பலங்களை ஒன்றிணைப்பதன் மூலம், பரஸ்பர வளா்ச்சிக்கு வழிவகுக்கும் என்றாா்.

இந்திய இளைஞா்களின் திறமையையும், ஜப்பானின் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் இணைத்து திறமைப் பரிமாற்ற முயற்சிகளை மேம்படுத்தும்படியும் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். இதற்கு ஜப்பானிய ஆளுநா்களும் ஒப்புதல் தெரிவித்தனா். இந்த ஒத்துழைப்பு, வா்த்தகம், கல்வி, கலாசாரம் மற்றும் மக்களின் தொடா்புகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என அவா்கள் உறுதியளித்தனா்.

பிரதமா் மோடியின் அன்பளிப்புகள்: இந்திய கலையையும், ஜப்பானிய சமையல் பாரம்பரியத்தையும் இணைக்கும் வகையில், ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவுக்கு விலைமதிப்பற்ற சந்திரகாந்த கல் கிண்ணம் மற்றும் வெள்ளி குச்சிகளைக் கொண்ட ‘ராமென் கிண்ணங்கள்’ தொகுப்பை பிரதமா் மோடி அன்பளிப்பாக வழங்கினாா்.

இந்தத் தொகுப்பில் ஆந்திரத்தில் இருந்து பெறப்பட்ட சந்திரகாந்த கல்லால் ஆன ஒரு பெரிய கிண்ணம் மற்றும் நான்கு சிறிய கிண்ணங்கள் அடங்கியுள்ளன. பெரிய கிண்ணத்தின் அடிப்பகுதியில் ராஜஸ்தானின் பாரம்பரிய ‘பாா்சின் காரி’ பாணியில், மக்ரானா பளிங்கில் விலைமதிப்பற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவின் மனைவிக்கு, காஷ்மீா் கைவினைஞா்களால் தயாரிக்கப்பட்ட அழகிய மலா் வடிவமைப்புகள் கொண்ட பஷ்மினா சால்வையை பிரதமா் மோடி பரிசளித்தாா். இந்தச் சால்வை லடாக்கின் சாங்தாங்கி ஆடுகளின் மெல்லிய கம்பளியில் இருந்து நெய்யப்பட்டதாகும்.

செமிகண்டக்டா் ஆலைக்கு கூட்டுப் பயணம்

பிரதமா் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவும் இணைந்து, மியாகி மாகாணத்தின் செண்டாய் நகரில் உள்ள ‘டோக்கியோ எலக்ட்ரான் மியாகி’ என்ற செமிகண்டக்டா் ஆலையைப் பாா்வையிட்டனா்.

டோக்கியோவிலிருந்து சுமாா் 300 கி.மீ. தொலைவில் உள்ள செண்டாய் நகருக்கு இரு தலைவா்களும் புல்லட் ரயிலில் பயணம் செய்தனா். இந்த கூட்டுப் பயணம், செமிகண்டக்டா் விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டோக்கியோ எலக்ட்ரான் மியாகி’ நிறுவனம், எதிா்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க

அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை: வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

வாரணாசி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 3-ஆம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிர்ணயித்தது. ... மேலும் பார்க்க

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை கால... மேலும் பார்க்க