செய்திகள் :

"இந்தியா மீதான வரி 24 மணி நேரத்தில் உயரும்" - மீண்டும் எச்சரித்த ட்ரம்ப்!

post image

இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பர் இல்லை என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரி கணிசமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் மீது 25% வரியை அறிமுகப்படுத்திய ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிபொருள் மற்றும் ராணுவ ஆயுதங்கள் வாங்குவதனால் இந்தியாவின் மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்துக்குள் இந்தியா மீது கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர்.

Global Trade

சி.என்.பி.சி தளத்தில் பேட்டியளித்த அவர், இந்தியாதான அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிப்பதாகக் கூறியுள்ளார். "இந்தியா ஒரு நல வர்த்தக கூட்டாளி அல்ல, ஏனென்றால் அவர்கள் நம்முடன் அதிக வணிகம் செய்கின்றனர். ஆனால் நாம் அவர்களுடன் செய்வதில்லை. அதனால்தான் அவர்கள் மீது 25% வரி விதித்தேன். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறேன்" எனப் பேசியுள்ளார் அவர். '

மேலும், "அவர்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் போர் இயந்திரத்துக்கு எரிபொருள் ஊற்றுகின்றனர். அவர்கள் இதைத்தான் தொடரப்போகிறார்கள் என்றால், எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ட்ரம்ப் இந்தியாவை மிரட்டுவதை கடுமையாக சாடியது ரஷ்யா. "எங்கள் வர்த்தக பங்குதாரர்களை அச்சுறுத்துவது மாஸ்கோவை (எங்களை) அச்சுறுத்துவதைப் போன்றதாகும்" எனக் கூறியது.

Modi and Putin

ட்ரம்ப்பின் எச்சரிக்கைகள் "நியாயமற்றது மற்றும் காரணமில்லாதது" எனக் கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது இந்திய அரசாங்கம்.

அதில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டுவதன் மூலம் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவைக் குறிவைப்பதாக வெளியுறவுத்துறைக் கூறியுள்ளது.

மேலும் இந்தியா அதன் மக்களின் தேவைக்காக மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியது சர்வதேச சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளது. அத்துடன் இந்தியா ரஷ்யாவுடனான் வர்த்தகத்தை நிறுத்த அழுத்தம் தரும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தைப் பேணுவதாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது!

`ஆணவக்கொலை தனிச்சட்டம், இடைநிலை சாதியினர் வாக்குகளை பாதிக்காது!’ - முதல்வரை சந்தித்த திருமாவளவன்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தனிச்சட்டம் தேவை என திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்... மேலும் பார்க்க

திருப்பூர் SI கொலை: `தப்பிக்க முடியாது எனத் தெரிந்தும் ஏன்?’ - அண்ணாமலை சொல்லும் 3 காரணங்கள்

திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் பணியின் போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சென்ற அழகுராஜா என்ற ஆயுதப்படைக் காவலர் காயமடைந்து... மேலும் பார்க்க

`தூய்மைப் பணியாளர்களை வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு!' - ஆதவ் அர்ஜுனா

சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா. இதுகுறித... மேலும் பார்க்க

ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா: திமுக கூட்டணியை விரும்புகிறதா தேமுதிக? இதில் திமுக கணக்கு என்ன?

'நட்பு ரீதியான சந்திப்பு' கடந்த ஜூலை 31 அன்று, முதல்வர் ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "முதல்வர் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!

தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க