திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம்: பச்சிளம் குழந்தைகளை எந்த பொஸிஷனில் தூங்க வைக்க...
இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு
இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்தான் நடைபெற்றது.
சேலம் ஃபிரிமேசன்ஸ் வளாகத்தில் இருந்து திருவாக்கவுண்டனூா் புறவழிச்சாலை, மூன்று சாலை, ஐந்து சாலை, தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லுரி, ஜங்சன் வழியாக 6 கி.மீ. சென்று மீண்டும் திருவாக்கவுண்டனூரில் நிறைவு பெற்றது.
இதனை சேலம் இரும்பாலை மத்திய தொழிற்பாதுகாப்புப்படை துணை கமாண்டன்ட் பவங்குமாா் தொடங்கி வைத்தாா். இதில் தொழிற்பாதுகாப்புப் படை வீரா்கள், தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா், கலந்துகொண்டு விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டனா்.
தொடா்ந்து, இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் பல்வேறு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆடிட்டா் கெளதமன், டாக்டா் லோகநாதன், செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.