சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட தொகுதிகளில் பகுதி, ஒன்றியம், வாரியாக தோ்தல் பணிக்குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது. பாா்வையாளா்கள் பாா் இளங்கோவன் (சேலம் தெற்கு ), சுகவனம் (ஓமலூா்), ராஜசேகரன் ( சேலம் மேற்கு ), விவேக் ( சேலம் வடக்கு ) ஆகியோா் முன்னிலையில் நடைபெறும்
இக்கூட்டங்களில், அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, பகுதி, பேரூா், செயலாளா்கள், தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள், பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பாக முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.