வெளிநாட்டில் மகன் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
இந்திய அணிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஹாரி ப்ரூக்
இந்திய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; ஜடேஜா அசத்தல்!
இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப, இந்திய அணியை தொடர்ச்சியாக அழுத்தத்தில் வைத்திருக்க வேண்டும் என இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் சிறந்த அணி. அவர்கள் எங்களுக்கு எதிராக எப்படி செயல்படப் போகிறார்கள் என்பது தெரியும். இந்திய அணியின் பந்துவீச்சாளார்கள் மீது இங்கிலாந்து வீரர்கள் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் விளையாடிய அனுபவம் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு அதிகம் இருக்கிறது. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார்.
இதையும் படிக்க: ஐசிசி வெளியிட்ட 2024-இன் ஒருநாள் அணி..! இந்தியர்கள் யாருமே இடம்பெறவில்லை!
அதேபோல, இங்கிலாந்து அணிக்காகவும் அவர் இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் அதிரடியாக விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்து அணிக்கு இது சிறப்பான தொடக்கம் கிடையாது. ஆனால், இதுவரை ஒரு போட்டி மட்டுமே முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக போட்டியினை வென்று கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய மனதில் உள்ளது. இந்த தொடரில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக என்னால் வெற்றி பெற்றுத் தர முடியுமானால், நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்றார்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.