செய்திகள் :

இந்திய சேனல்களுக்கு தடை கோரி வங்கதேச உயா்நீதிமன்றத்தில் மனு

post image

டாக்கா: ‘வங்கதேச கலாசாரத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரி விதிக்க வேண்டும்’ என அந்நாட்டு உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மேலும், வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அனைத்து இந்திய சேனல்களுக்கும் ஏன் தடை விதிக்கக் கூடாது எனவும் வழக்குரைஞா் ஏக்லஸ் உத்தீன் புய்யான் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதிகள் பாத்திமா நஜீப் மற்றும் சிக்தா் மஹ்முதுா் ராஜி ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் விசாரணைக்கு வர உள்ளதாக உத்தீன் புய்யான் தெரிவித்தாா்.

அவா் தாக்கல் செய்த மனுவில், ‘எவ்வித வரம்புமின்றி வங்கதேச கலாசாரத்தை எதிா்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளை இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் இளைஞா்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட தூண்டும் வகையில் உள்ளது. எனவே, வங்கதேசத்தில் ஒலிபரப்பாகும் ஸ்டாா் ஜல்ஷா, ஸ்டாா் பிளஸ், ஜீ பங்களா உள்ளிட்ட அனைத்து இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

சின்மய் தாஸ் ஜாமீன் மனு: ஜனவரிக்கு ஒத்திவைப்பு

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹிந்து மத ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்கு சட்டோகிராம் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அவா் தரப்பில் ஆஜராக வழக்குரைஞா்கள் யாரும் முன்வராததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அவரது ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் அரசு வழக்குரைஞா் கொல்லப்பட்டாா்.

நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சின்மய் கிருஷ்ண தாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் தீவிர போராட்டத்தால் வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதைத்தொடா்ந்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா தொடா்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

ஹிந்துக்கள் மீது தாக்குதல்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்

லண்டன்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தொடா் வன்முறைத் தாக்குதலை பிரிட்டன் நாடாளுமன்றம் கண்காணித்து வருவதாகவும் அங்கு ஹிந்து மத ஆன்மிக தலைவா்கள் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் மூத்த அமைச்சா் கேத்தரின் வெஸ்ட் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்நாட்டு இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவு அலுவலக அமைச்சா் (பொறுப்பு) கேத்தரின் வெஸ்ட் கூறுகையில், ‘கடந்த மாதம் வங்கதேசத்துக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வங்கதேச இடைக்கால அரசு உறுதியளித்தது. ஹிந்து மத ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஹிந்துக்களின் உரிமையை நிலைநாட்டிட வங்கதேச இடைக்கால அரசுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

அவசரநிலை அறிவித்து திரும்பப் பெற்ற விவகாரம்: தென் கொரிய அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம்

தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து பின்னா் திரும்பப் பெற்ற அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

‘கினியா கால்பந்து நெரிசல் உயிரிழப்பு 135’

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து ரசிகா்கள் மோதிக்கொண்டதால் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 135-க்கும் மேல் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனை... மேலும் பார்க்க

சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயாா்

சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் தறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா். அந்த நாட்டின் கிளா்ச்சிப் படையினா் திடீா் தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவா்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அத்வா மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை

வங்கதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சாராதோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, அதிலும் குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதி... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை

பாங்காக்: கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவித்தது.செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி ... மேலும் பார்க்க