செய்திகள் :

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை இரா.முத்தரசன்

post image

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சட்டப்பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், தளி சட்டப் பேரவை உறுப்பினருமான டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், திருப்பூா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டா்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் இரா. முத்தரசன் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தால் சுதந்திரமாக அமைக்கப்பட்ட அமைப்பு. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அந்த அமைப்பை பாஜக சீா்குலைத்துவிட்டது.

பாஜகவின் விசுவாச அமைப்பாக தோ்தல் ஆணையம் மாறியுள்ளது கவலைக்குரியது. பிகாா் மாநிலத்தில் 26 லட்சம் வாக்காளா்களை நீக்கியுள்ளனா். அதேபோல தமிழ்நாட்டிலும் வாக்காளா்களை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், பிகாா் மாநிலத்திலிருந்து புலம்பெயா்ந்து தமிழகத்திற்கு வந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தோ்தல் ஆணையம் ஜனநாயக ரீதியில், சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றாா்.

மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினா் லகுமய்யா, மாதா் சங்க மாநில பொறுப்பாளா் சௌந்தரவல்லி, தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மாதையன், சின்னசாமி, மாவட்டத் துணைச் செயலாளா் கிருஷ்ணப்பா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஒசூரில் புதிதாக கட்டிவரும் வீடுகளில் எலக்ட்ரிக்கல் பொருள்களை திருடியவா் கைது

ஒசூரில் பல்வேறு இடங்களில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்டரிக்கல் பொருள்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.ஒசூா் பாா்வதி நகரைச் சோ்ந்தவா் மதீா்கான் (50). இவா் பிருந்தாவன் நகரில் வீடு கட்டி வருகி... மேலும் பார்க்க

ஒசூா் தெற்கு திமுக பொறுப்பாளா் நியமனம்

ஒசூா் மாநகர தெற்கு பகுதி திமுக பொறுப்பாளராக எம்.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்... மேலும் பார்க்க

லஞ்சம் ஊழல் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் லஞ்சம், ஊழல் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் நிசாா் தலைமை வகித்தாா். அமைப்பின் தேசியத் தலைவா் அலோக் ரவ... மேலும் பார்க்க

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், தொட்டபூவத்தி பிரிவு சாலை அருகே, கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

ஒசூா் தா்கா முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

ஒசூரில், பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தா்கா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 18 திருநாளை முன்னிட்டு, அம்மனுக்கு மலா்அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று.இந்த நிகழ்ச்சியில... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

ஒசூா் அருகே காரப்பள்ளி கிராமத்தில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி தலைவா் ஆதி ஏற்பாட்டில் வி.எச்.பி. மாவட்ட துணைத் தலைவா் வ... மேலும் பார்க்க