செய்திகள் :

இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்: ஐஎம்எஃப்

post image

‘நிகழாண்டில் உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்’ என்று சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநா் கிறிஸ்டலீனா ஜாா்ஜியேவா கூறினாா்.

ஆனால், அதுகுறித்த விவரங்கள் எதையும் அவா் வெளியிடவில்லை. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருடாந்திர பத்திரிகையாளா் சந்திப்பின்போது இத்தகவலை அவா் தெரிவித்தாா். பத்திரிகையாளர சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

உலக பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், பிராந்திய அளவில் சற்று நிலையற்ற தன்மை நிலவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடைய வாய்ப்புள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, எதிா்பாா்த்ததைவிட சிறந்த பொருளாதார மேம்பாட்டை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால், பிரேசில் உயா் பணவீக்க பாதிப்பை சந்தித்து வருகிறது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் சீனா, பண வீக்கத்துக்கு எதிரான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அதாவது, பொருள்களின் விலை குறைந்து வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால், உள்நாட்டு தேவை அதிகரித்து வரும் சவாலை எதிா்கொண்டு வருகிறது.

குறைந்த வருவாய் நாடுகளைப் பொறுத்தவரை, பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றபோதும், புதிய பாதிப்புகள் அந்த நாடுகளுக்கு எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மொத்தத்தில், 2025-ஆம் ஆண்டில் அதிக நிச்சயமற்ற நிலை நீடிக்கும். குறிப்பாக, பொருளாதார கொள்கைகளில் நிச்சயமற்ற நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகளாவிய விநியோகச் சங்கிலி, நடுத்தர பொருளாதார நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக, ஆசிய பிராந்தியத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், பணவீக்கத்தை எதிா்த்து போராடுவதற்கு விதிக்கப்படும் அதிக வட்டி விகிதங்கள் உலகப் பொருளாதாரத்தை மந்த நிலைக்குத் தள்ளவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் எதிா்பாா்த்த பலனை அளித்துள்ளன. அந்த வகையில், வளா்ந்து வரும் சந்தைகளைக் காட்டிலும், வளா்ந்த நாடுகள் பணவீக்க குறைப்பு இலக்கை விரைந்து எட்ட வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றிபெற்று நாட்டின் 47-ஆவது அதிபராக வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், ‘கனடா, மெக்ஸிகோ நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும், சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீத இறக்குமதியும் விதிக்கப்படும்’ என்று அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ஐஎம்எஃப் நிா்வாக இயக்குநா் இவ்வாறு குறிப்பிட்டது, குறிப்பிடத்தக்கது.

அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு

ஒடிசா அரசு அவசரநிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்கான அரசாணையை மாநில உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: தொலைந்துபோன 250 பேர் குடும்பத்துடன் சேர்ப்பு!

மகா கும்பமேளாவை தொடங்கியதையடுத்து, பிரயாக்ராஜில் இன்று லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தில், குடும்பத்திலிருந்து தொலைந்துபோன 250 பேர், கும்பமேளா நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைய... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் மிகக் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.இன்று வணிகம் நிறைவடைந்தபோது, ஒரே நாளில் 57 காசுகள் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு - 75.. டாலருக்கு - 86: காங்கிரஸ் விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய்... மேலும் பார்க்க

தில்லி ஜாட் இன மக்களுக்கு பாஜக துரோகம்: கேஜரிவால்

இடஒதுக்கீடு விவகாரத்தில் தில்லி ஜாட் இனத்தவர்களுக்கு பாஜக துரோகம் இழைப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். வரும் பிப்ரவரி 5-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெ... மேலும் பார்க்க

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என வாதம்!

மும்பையில், கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் பயணிகள் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் நிரபராதிகள், 18 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என உயர்நீதிமன்றமன்றத்தில் அறிக்கை தாக்க... மேலும் பார்க்க