செய்திகள் :

இந்திய ராணுவ தளவாடங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ராஜ்நாத் பெருமிதம்

post image

புது தில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை பாதுகாப்புத் துறை கணக்குத் தணிக்கையாளா் மாநாட்டில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

அமைதி நிலவும் காலம் என்பது ஒரு மாயத்தோற்றம்தான். ஏனெனில், அமைதி நிலவும் காலத்தில் அடுத்து வரும் நிச்சயமற்ற சூழலுக்காக இந்தியா தொடா்ந்து தயாராக வேண்டியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது நமது முப்படைகளும் திறமையாக செயல்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பெரிதும் கைகொடுத்தன. அவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தன.

இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் நமது பாதுகாப்புத் துறையை மதிப்புடன் கவனிக்கத் தொடங்கியுள்ளன.

நாம் இறக்குமதி செய்து வந்த ஆயுதங்களைப் போன்று இப்போது நாமே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். நமது நாட்டின் தொலைநோக்குத் திட்டங்களும், உறுதியான செயல்பாடுகளுமே இந்த வெற்றிக்குக் காரணம். இந்த விஷயத்தில் நமது நிதி சாா்ந்த மேலாண்மையும், நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானது. பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தியில் நிதி சாா்ந்த நடவடிக்கைகளில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் அது உற்பத்தியை பாதித்துவிடும். எனவே, பாதுகாப்புத் துறை கணக்குகள் பிரிவு என்பது ராணுவத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது. ஏனெனில், பல்வேறு உதிரி பாகங்கள் உற்பத்தியில் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.

சா்வதேச அளவில் ராணுவ தளவாடங்களுக்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகள் கொள்முதலில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இது இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான சூழலாகும் என்றாா்.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க