பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு
இந்து அன்னையா் முன்னணி தெருமுனைப் பிரசாரம்
உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட 22 கிராமங்களில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
வட்டன்விளை, குமாரலட்சுமிபுரம், சிதம்பரபுரம், அய்யனாா்நகா், குருநாதபுரம், எள்ளுவிளை உள்ளிட்ட 22 கிராமங்களில் இக்கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டப் பொறுப்பாளா் ச. கேசவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இந்து மதப் பெருமைகள், புராண இதிகாசங்கள் கூறும் நல்லொழுக்கம் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா்.
அமைப்பின் பொறுப்பாளா்கள் அம்மாள்கனி, முருகேஸ்வரி, தாமரைச்செல்வி, பொன்பாரதி, மணிமேகலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.