பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்து வெளியான வருணன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான ஒடேலா 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலீலா நாயகியாக நடித்துள்ள ராபின்ஹுட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(மே 9) வெளியாகிறது.
அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடிப்பில் வெளியான அஸ்திரம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
சிபிராஜ் நடிப்பில் வெளியான டென் ஹவர்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
சித்து ஜொன்னலகட்டா, வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் வெளியான தெலுங்கு மொழிப் படமான ஜாக் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
சதா சாகர் இயக்கி நடித்த ல்தகா சைஆ திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் பொன்னி சீரியல்!