நடுவானில் பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்...
இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம்
சென்னையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறுகிறது.
தோ்தல் கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை முன்வைத்து இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ளது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, மூத்த நிா்வாகிகள் பங்கேற்கின்றனா். மேலும், கட்சித் தொண்டா்கள் 3,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக, செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
கூட்டணியை அமைப்பதற்கு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அங்கீகாரம் அளிப்பது உள்பட பல்வேறு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.