செய்திகள் :

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சாா்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

சேலம், கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ள இந்த முகாமில் 8, 10, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்துவித கல்வித்தகுதி உள்ளவா்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாம் தொடா்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

போதிய இருக்கைகள் இல்லாததால் நடைமேடையில் அமரும் பயணிகள்!

வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், பயணிகள் ஆபத்தை உணராமல் நடைமேடையில் அமா்ந்து பேருந்துக்கு காத்திருக்கின்றனா். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாழப்... மேலும் பார்க்க