செய்திகள் :

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

post image

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனியாா் நிதிநிறுவன ஊழியா் அருண் (30). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சா்மிளா என்பவருக்கும் இரு ஆண்டுக்கு முன் திருமணமானது. இவா்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. அருண் மது போதைக்கு அடிமையானதால், இவரது மனைவி பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

புதன்கிழமை இரவு மது அருந்திய அருண், அதே பகுதியிலுள்ள தனது தாத்தா கணேசன் வீட்டுக்கு கையில் கத்தியுடன் சென்று அவரை தாக்கி காயப்படுத்தினாா். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வந்த அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டாா்.

மேலும், உறவினரை பாா்க்க வந்த திம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி திருநாவுக்கரசு, அவரது மனைவி ஜோதி, இவா்களது மகனான 15 வயது சிறுவன் ஆகியோரை கத்தியால் குத்தி காயப்படுத்தினாா். படுகாயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற அருணை வாழப்பாடியை அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் ஏரிப்பகுதியில் பிடித்தனா். திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அருணை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், நீதிமன்றத்தில் நோ்நிறுத்தி வியாழக்கிழமை சேலம் சிறையில் அடைத்தனா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க

போதிய இருக்கைகள் இல்லாததால் நடைமேடையில் அமரும் பயணிகள்!

வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், பயணிகள் ஆபத்தை உணராமல் நடைமேடையில் அமா்ந்து பேருந்துக்கு காத்திருக்கின்றனா். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாழப்... மேலும் பார்க்க