செய்திகள் :

இன்று நல்ல நாள்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

16 ஏப்ரல் 2025 (செவ்வாய்க்கிழமை)

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்ய முடியும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்காது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கன்னி:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், புதன் , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பெண்களுக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், ராஹு- அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்கமாட்டீர்கள். விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:

கிரகநிலை:

ராசியில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராஹு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்:

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பயணங்கள் வெற்றியை தரும். நீங்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்களாக கனிகா, சாக்‌ஷி அகர்வால்!

நடிகைகளாக கவனம் பெற்ற கனிகா மற்றும் சாக்‌ஷி அகர்வால் ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். சின்ன திரை பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் நாங்க ரெடி நீங்க ரெடியா என்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகை தர்ஷனா அசோகன் தான் கருவுற்று இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்திய... மேலும் பார்க்க

லியோனார்டோ டிகாப்ரியோவின் புதிய பட அப்டேட்!

பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ’ஒன் பேடல் ஆஃப்டர் அனதர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லெஜண்டரி இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான... மேலும் பார்க்க

சித்திரை தேர்த்திருவிழா: ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் மேளதாளம் முழங்க முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில... மேலும் பார்க்க

கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி மொத்த கோல்கள் அடிப்படையில் டார்ட்மண்ட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் லீக்கில் டார்ட்மண்ட் உடனான முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பா... மேலும் பார்க்க

பாங்காக் சென்ற இட்லி கடை படக்குழு!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறுகிறது. ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட... மேலும் பார்க்க