தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
இன்று பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,776 போ் எழுத வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 19,776 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. மாவட்டத்தில், 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 3) முதல் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 தோ்வு மையங்களில் 8,887 மாணவா்கள், 10,609 மாணவிகள் என மொத்தம் 19,496 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
இதற்காக ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் போதுமான இடவசதி, சுத்தமான குடிநீா், தூய்மையான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலா் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சார வசதி போன்ற வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.