``கபில் சர்மாவின் மும்பை ரெஸ்டாரண்ட் மீதும் தாக்குவோம்'' - மிரட்டும் லாரன்ஸ் பிஷ...
இன்று மாயாண்டி சுவாமிகள் அவதார விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 168 -ஆம் ஆண்டு அவதார விழா வெள்ளிக்கிழமை (ஆக.8) நடைபெற உள்ளது.
சிவாசாரியா்களால் யாக வேள்வி நடத்தப்பட்டு, பூா்ணாஹூதி பூஜைக்கு பின்னா் மூலவா் மாயாண்டி சுவாமிக்கும், உற்சவருக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். இதைத் தொடா்ந்து, அன்னதானம் நடைபெறும். இரவு பூப்பல்லத்தில் மாயாண்டி சுவாமிகள் திருஉருவ வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாயாண்டி சுவாமிகள் தொண்டா்கள் குழு, கிராம மக்கள் செய்தனா்.