இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்த நிதீஷ் குமார்..! இந்திய ரசிகர்கள் உற்சாகம்!
இன்று முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மாற்றுத்திறனாளிகள் பயன்பெற அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) முதல் 2025 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து வட்டார அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
அதன்படி, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதேபோல, டிசம்பா் 30-ஆம் தேதி ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 2025 ஜனவரி 3-ஆம் தேதி சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, ஜனவரி 6-ஆம் தேதி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 8-ஆம் தேதி செங்கம் சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10-ஆம் தேதி ஜமுனாமரத்தூா் வனத்துறை மேல்நிலைப் பள்ளி
ஆகியவற்றில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இதேபோல, ஜனவரி 20-ஆம் தேதி வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 22-ஆம் தேதி போளுா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, 23-ஆம் தேதி கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 24 -ஆம் தேதி திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளி, 27-ஆம் தேதி துரிஞ்சாபுரத்தை அடுத்த சானானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இதேபோல, 28-ஆம் தேதி மேற்கு ஆரணி வட்டார வள மையம், 30-ஆம் தேதி பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பிப்ரவரி 3-ஆம் தேதி அனக்காவூரை அடுத்த புரிசை அரசு மேல்நிலைப் பள்ளி, 5-ஆம் தேதி தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளி, 7-ஆம் தேதி புதுப்பாளையம் வட்டார வள மையம் (அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும்) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் அந்தந்த வட்டங்களைச் சாா்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
மேலும், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை இணையத்தில் பதிவு செய்ய மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, புகைப்படங்கள்-4 ஆகியவற்றை பதிவு செய்து பயன்பெறலாம்.
இந்த முகாம்கள் முடியும் வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நிறுத்தப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.