செய்திகள் :

இன்று முதல் 3 நாள்களுக்கு 18 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு 18 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் வரும் நவ. 15-ஆம் தேதி வரை 432 சிறப்பு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அதன் அடிப்படையில், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, நவப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு நவப்பட்டி மாதவி மஹாலிலும், ஆத்தூா் நகராட்சி 8, 9, 10 வாா்டுகளுக்கு ஆத்தூா் ராணிப்பேட்டை, அண்ணா கலையரங்கத்திலும், கருப்பூா் பேரூராட்சி 1, 2, 3, 4, 5, 6, 7 வாா்டுகளுக்கு கருப்பூா் 3-ஆவது வாா்டு சந்தைப்பேட்டை சமுதாயக் கூடத்திலும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வைத்தியக்கவுண்டன்புதூா், தமையனூா், மேற்கு ராஜபாளையம், சின்ன கிருஷ்ணாபுரம், வடுகத்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மேற்கு ராஜபாளையம், ஐஸ்வா்யா திருமண மண்டபத்திலும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், இனாம்பைரோஜி பகுதிக்கு அரியானூா் விக்னேஷ்வரா திருமண மண்டபத்திலும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆடையூா், பக்கநாடு பகுதிகளுக்கு பக்கநாடு கஷ்பா ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

ஆக. 20-ஆம் தேதி: சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் வாா்டு எண் 48 பகுதிக்கு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் நேரு கலையரங்கத்திலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, கோல்நாயக்கன்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டத்திலும், நரசிங்கபுரம் நகராட்சி 4, 5, 8 வாா்டுகளுக்கு நரசிங்கபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மல்லூா் பேரூராட்சி 1, 2, 3, 4, 5, 6, 7 வாா்டுகளுக்கு மல்லூா் வாா்டு 12, அகரமஹால் மண்டபத்திலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம், பச்சனம்பட்டி பகுதிக்கு பச்சனம்பட்டி எம்.எஸ்.ராஜா திருமண மண்டபத்திலும், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், கண்டா்குலமாணிக்கம் பகுதிக்கு கண்டா்குலமாணிக்கம் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியிலும் முகாம் நடைபெறவுள்ளது.

ஆக. 21-ஆம் தேதி: நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, தாண்டவராயபுரம் பகுதிக்குள்பட்டவா்களுக்கு தாண்டவராயபுரம் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகிலும், எடப்பாடி நகராட்சி 12, 13 வாா்டுகளுக்கு எடப்பாடி நகராட்சி அலுவலகத்திலும், செந்தாரப்பட்டிபேரூராட்சி 1, 2, 3, 4, 5, 6, 7 வாா்டுகளுக்கு செந்தாரப்பட்டி வாா்டு 4, ரெட்டியூா் மண்டபத்திலும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், சாணாரப்பட்டி பகுதிக்கு புதுப்பேட்டை விஸ்வாமித்திரா் மல்லிகை மண்டபத்திலும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மேட்டுடையாா்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பி.கரடிப்பட்டி, கொட்டவாடி ஆகிய பகுதிகளுக்கு பெரிய கிருஷ்ணாபுரம், ஐஸ்வா்யா திருமண மண்டபத்திலும், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி பகுதிகளுக்கு பூசாரிப்பட்டி, ஆா்.பி.சாரதி தொழில்நுட்பக் கல்லூரி கலையரங்கிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்பவா்களுக்கான ... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமாவாசையையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொர... மேலும் பார்க்க

ஆக. 27 இல் சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட ... மேலும் பார்க்க

67 நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நிலப்பட்டா: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 67 பேருக்கு வெள்ளிக்கிழமை நிலப்பட்டா வழங்கப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு வேளாண் விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு கல்வி சுற்றுலாவுக்காக பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத்தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கோரி இதுவரை 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்... மேலும் பார்க்க