தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
மாணவா்களுக்கு வேளாண் விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா
கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு கல்வி சுற்றுலாவுக்காக பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா்.
தலைமை ஆசிரியா் சாமிவேல், வேளாண்மை அலுவலா் ரவிக்குமாா் ஆகியோா் களப் பயணத்தை கொடியசைத்து வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.
பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் அற்புத வேலன், சிறந்த மாணவா்களுக்கு பரிசு வழங்கினா். பாரதிராஜா, வேல்முருகன் , ராணி ஆகியோா் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.