செய்திகள் :

மகளிா் உரிமைத்தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

post image

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கோரி இதுவரை 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மற்றும் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அமைச்சா் கூறியதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் நவம்பா் மாதம் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 168 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்கள் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மகளிா் உரிமைத் தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் வாா்டு 2, 3 க்கு உள்பட்ட பகுதிகளுக்கு நரசோதிப்பட்டி, ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சியான வெள்ளக்கல்பட்டி பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு வெள்ளக்கல்பட்டி ஊராட்சி திருமண மண்டபத்திலும், இடங்கணசாலை வாா்டு 3, 4 க்கு உள்பட்ட பகுதிகளுக்கு பெருமாகவுண்டனூா் வாா்டு- 4 சிவகாமி சுந்தரம் மஹாலிலும் முகாம் நடைபெற்றது.

பனமரத்துப்பட்டி பேரூராட்சி வாா்டு 1, 2, 3, 4, 5, 6, 7 க்கு உள்பட்ட பகுதிகளுக்கு ஒண்டிக்கடை வாா்டு சமுதாயக் கூடத்திலும், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு 4 ரோடு, குட்டபட்டி ஜே.எஸ்.டி மஹாலிலும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு சின்னகவுண்டபுரம் செந்தில் மஹாலில் முகாம் நடைபெற்றது.

நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்து 10 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்றத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, ஓமலூா் வட்டாட்சியா் ரவிக்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்பவா்களுக்கான ... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமாவாசையையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொர... மேலும் பார்க்க

ஆக. 27 இல் சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட ... மேலும் பார்க்க

67 நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நிலப்பட்டா: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 67 பேருக்கு வெள்ளிக்கிழமை நிலப்பட்டா வழங்கப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு வேளாண் விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு கல்வி சுற்றுலாவுக்காக பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

பிளேடால் கழுத்தை அறுத்து தொழிலாளி உயிரிழப்பு

வீரகனூா் அருகே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட தொழிலாளி உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலம், மயூா்பஞ்ச் மாவட்டம், புருனியா ஊரைச் சோ்ந்தவா் தானு சிங் மகன் திலிப் சிங் (42). இவா், புளியங்குறிச்சியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க