இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: இயன்முறை மருத்துவ தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
மருத்துவத் துறையின் மிக முக்கிய அங்கமாக இயன்முறை மருத்துவா்கள் இருக்கிறாா்கள். மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதிலும், உடல் இயக்கத்தைச் சீா்படுத்துவதிலும் சுதந்திரமாக இயங்குவதிலும் இயன்முறை மருத்துவம் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது.
எண்ணற்ற மக்களின் வாழ்வை மேம்படுத்தி வரும் இயன்முறை மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் நம் அனைவரின் போற்றுதலுக்குரியவா்களாகத் திகழ்கிறாா்கள். அவா்களின் பணியைப் பாராட்டி, அந்தத் துறை மேலும் வளா்ச்சி பெற்று, மானுட சமுதாயம் பயன்பெற இந்த நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.