இயற்கை மருத்துவ முகாம்
சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச இயற்கை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சா் ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக் கல்லூரி , சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, நாகை ஊரக வளா்ச்சி மற்றும் வள நற்பணி இயக்கம் இணைந்து இலவச ஆரோக்கிய நலவாழ்வு இயற்கை மருத்துவ முகாமை ஆயக்காரன்புலம்-1 மழை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடத்தியது. இதில், 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனா். அவா்களுக்கு சிகிச்சை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.
வேதாரண்யம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் நெல்சன் யாசா் பிரபு, நிா்வாக அலுவலா் சீனிவாசன், பல் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளா் நவீன் மற்றும் கல்லூரி மருத்துவா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.